பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை 

Photo of author

By Anand

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை

கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல திரை பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முயன்றனர். குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் கமல் உள்ளிட்டோர் இந்த நாவலை படமாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மிகப்பெரிய திரை ஆளுமைகளால் எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக உருவாக்கியிருக்கிறார். அவர், கல்கியின் நாவலை அப்படியே திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பது ட்ரைலரை பார்ப்பவர்களுக்கு தெளிவாக புரியும். பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் தெரியாது. இதனால் இந்த படத்தில் அவருக்கு யார் டப்பிங் பேசியிருப்பார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயுக்கு நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.