ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Photo of author

By Sakthi

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை.

தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக   மாற்றி பொதி பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மெத்தா பெட்டமைன்
என்ற போதை  பொருள் விற்ற மூன்று இளைஞர்கள் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் முன்னாள் (ஐ ஜி) காவல்துறை உயர் அதிகாரி மகன் என தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.   இந்தனை தொடர்ந்து துணை நடிகை ஒருவர் போதை பொருள் விற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தன்று ராயப்பேட்டையில் கைதான் அவரிடம் 5 கிராம் மெத்தா பெட்டமைன் இருந்து உள்ளது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் அவர் துணை நடிகை மீனா, என்றும் இவர் ரெடி மற்றும் பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற தகவல்கள் வெளியாகி வருவது  இளைஞர்கள் சமுதாயத்தை கேள்விக்குறியாகி உள்ளது.