குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை

0
182

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை
குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக சென்னையில் 30 பேர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து அவர்களின் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 30 பேர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை அடுத்து அந்த 30 பேரையும் கைது செய்ய இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் காவல்துறை விறுவிறுப்பான நடவடிக்கையை எடுத்து வருவதால் இந்த பட்டியலில் உள்ளவர்கள் பெரும் பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆபாச பட விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், இந்த குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கல் என்றும் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் காவல்துறை இயக்குநர் ரவி அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கமா? என்ன காரணம்?
Next articleகைதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு 12 பேர் பலி?