ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!
சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாக இன்டர்போல் சிபிஐக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் அதிரடி சோதனையை சிபிஐ நடத்தியது.மேலும் சிபிஐ மூலம் சிறார் ஆபாச படங்கள் பரப்பும் வலைய தளம் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி 63 ஆபாச பட வலைதளங்கள் சிபிஐயால் முடக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்,ட்விட்டரில் சிறார்கள் ஆபாச படங்கள் பதிவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த 3 பேரை,டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையம்,ட்விட்டரில் சிறார்களின் ஆபாச படங்கள் அதிகம் வலம் வருகிறது எனக் கோரி,ட்விட்டரின் மீது வழக்கு பதிவு செய்யவும்,இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.