பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

0
101

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக பாஜக நடத்தும் யாத்திரைக்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், மக்களிடையே அந்த கட்சிக்கு ஆதரவு பெருகுவதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது.

தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று பாஜக பாஜக சபதமேற்று இருக்கின்றது. அதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து அது பலனளிக்காமல் போகவே, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இந்த யாத்திரை அதற்கு பலன் அளித்து இருக்கின்றது. இதற்கு முன்னர் அந்தக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமோ அல்லது கூட்டமோ நடைபெற்றால், 20 அல்லது 30 நபர்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள்.ஆனால் இந்த வேல் யாத்திரையில் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூடுகின்றது.

சென்ற ஆறாம் தேதி திருத்தணியில் இந்த யாத்திரை தொடங்கிய நிலையில். அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி இருக்கிறார்கள். முன்னரெல்லாம் அந்தக் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் சுமார் 500 பேர் கூடினாலே ஆச்சரியமாக கருதப்படும். ஆனால் இந்த யாத்திரை பொதுக்கூட்டங்கள் நடந்த கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தில், 100 பேர் முதல் 2,000 பேர் வரை பங்கு பெற்று 500 பேர் முதல் ஆயிரம் பேர் வரை கைதாகி இருக்கிறார்கள்.

இதற்கு கூட்டம் கூடுவதற்கான பின்னணி சம்பந்தமாக உளவுத்துறை, மதம்சார்ந்த குற்றதடுப்பு நுண்ணறிவு, க்யூ பிரிவு மாநகர நுண்ணறிவு, மாவட்ட எஸ் பி சி ஐ டி ஒன்றிணைந்த குற்றதடுப்பு நுண்ணறிவு. பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளை ஒன்றிணைத்து உளவுத்துறை அதிகாரிகள் தமிழக அரசின் பார்வைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்து அமைப்புகள் ஆரம்பித்த20:20 என்ற திட்டத்தினால், அந்த கட்சியின் யாத்திரைக்கு கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்த கூட்டங்களில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மட்டுமல்லாமல் இந்து அமைப்பு நிர்வாகிகள், கோயில்களில் பூஜை நடத்துவார்கள், போன்றோரும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தால் அந்த கட்சியில் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக இதுவரை தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளில் இருக்கின்ற ஓட்டுச்சாவடிகளில் சில மாவட்டங்களில் இருக்கும் ஓட்டுச்சாவடிகளில் மட்டும் பாஜக பிரதிநிதிகள் முகவர்களாக இருந்தனர் .எதிர் வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் இருக்கின்ற அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பாஜகவின் சார்பாக முகவர்கள் இடம் பெறுவதற்காக நிர்வாகிகள் தயார் செய்திருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் பாஜக அவர் முக்கிய இடத்தைப் பெறும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleஸ்டாலின் எட்டடி பாய்ந்தால்! பதினாறு அடி பாயும் உதயநிதி நமக்கு நாமே2 ஸ்டார்ட்!
Next articleகாவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!