இனி செல்போன் உபயோகம் செய்ய மின்சாரம் தேவையில்லை!! இதோ வந்துவிட்டது சோலார் சார்ஜர்!!

Photo of author

By Rupa

இனி செல்போன் உபயோகம் செய்ய மின்சாரம் தேவையில்லை!! இதோ வந்துவிட்டது சோலார் சார்ஜர்!!

Rupa

Portable Solar Charger Invention!

இனி செல்போன் உபயோகம் செய்ய மின்சாரம் தேவையில்லை!! இதோ வந்துவிட்டது சோலார் சார்ஜர்!!

சமீபகாலமாக நம்மில் பலரும் சோலார் பேனலை உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டோம். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சக்தியை சேமித்து வீடுகளில் மின் விளக்குகள், மின்விசிறி என அனைத்தையும் உபயோகிக்க பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி மத்திய அரசும் இது குறித்து புதிய திட்டத்தையும் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சோலார் பேனல் கொண்டு மிதிவண்டி, இருசக்கர வாகனம், மகிழுந்து என பலவற்றை பார்க்கிறோம். இவை அனைத்தும் நமக்கு மின்சாரத்தையே மிச்சபடுத்தி கொடுக்கும்.

அந்த வகையில் புதிதாக செல்போன்களில் சார்ச் செய்து கொள்ளும் புதிய சோலார் பேனலை தேசிய தொழில்நுட்ப கழகம் கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி நமது சாலையோரங்களில் உள்ள தெருவிளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பேனல் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சார்ஜபிள் கெப்பாசிட்டர் உள்ளிட்டவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவை அனைத்தும் நமது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்டுபிடிப்புகள் குறித்து மூன்று காப்புரிமையும் மூன்று பதிப்புரிமையும் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சோலார் பேனல் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் வசதியானது பவர் செமி கண்டக்டர் மூலம் செல்போன்களுக்கு செல்லும்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலைகளில் உள்ள தெருவிளக்குகளுக்கு சிறிய அளவு பேனலை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் இயங்க எளிய முறையில் வழி வாகை செய்துள்ளனர். சிறியதாக  இருந்தாலும் அதிக ஆற்றலை அனுப்பும் வல்லமை பெற்றது. இதன் வேலையானது  சூரிய ஒளியை சேமித்து ஆற்றல்மிக்கதாக கடத்தி தெரு விளக்குகளை எரிய செய்யும். இவை அனைத்தும் தற்பொழுது உள்ள சந்தை விலையை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கும் என்று என்ஐடி -யின் இஇஇ துறை பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார்.