ADMK BJP: அதிமுக கட்சியானது நான்கு முனைகளாக பிரிந்துள்ளது. அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறி எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். அவர்கள் கெடு விதித்த மறுநாளே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையன் உடனடியாக டெல்லி சென்று நிதியமைச்சர் உள்ளிட்டவர்களை பார்த்து வந்தார். கூட்டணி அமைத்திலிருந்தே பாஜக சைலன்டான முறையில் அதிமுகவை கையாள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
அந்த வகையில் கட்சியிலிருந்து நீக்கிய மற்றவர்களை கூட பார்க்க நேரம் ஒதுக்காமல் செங்கோட்டையனிடம் என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இவர் மீண்டும் கட்சியிலிருந்தால் மட்டும்தான் கோபிசெட்டிபாளையம் எனத் தொடர்ந்து சாதிய வாக்குகள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் தொடர் பிரச்சனைகளால் அதிமுக வலுவிழந்து வந்தால் சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி எதிலும் தலை தூக்க இயலாது. இந்த நிலைமை மாறவேண்டுமென்றால் எடப்பாடி ஒரு அடி கீழே இறங்கிதான் வரவேண்டும்.
அதற்காக இவர் டெல்லி செல்ல உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் கட்சியிலிருந்து வெளியேறிய செங்கோட்டையனை மீண்டும் இணைக்க சமாதானம் பேசுவதாகவும் கூறியிருந்தனர். இது ரீதியாக நேரடியாகவே எடப்பாடி யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, என் தன்மானத்தை இழந்து நான் எதையும் செய்ய மாட்டேன், அதிகாரத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் எனக் கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் இவர் டெல்லி செல்ல வாய்ப்பில்லை மீண்டும் செங்கோட்டையன் கட்சியில் எந்த ஒரு பதவியிலும் தொடர முடியாது என்பது திட்ட வட்டமாக தெரிகிறது.