தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு விதமான முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தபால் அலுவலகத்தால் உங்களுக்கு வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கப்பெறும். அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய கணிசமான வருமானம் கிடைப்பது தான் இந்த திட்டத்தின் கூடுதல் பலனாகும். 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் என நீங்கள் விரும்பும் காலத்திற்கேற்ப நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம் மற்றும் உங்களுக்கு இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது.
1 முதல் 5 வருடங்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ 1,000 டெபாசிட் செய்யலாம் மற்றும் இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை. தபலா அலுவலகத்தில் நீங்கள் எஃப்டி கணக்கை 5 வருட காலத்திற்கு திறந்தால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஒற்றை வயது வந்தவர், அதிகபட்சம் மூன்று பெரியவர்கள், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் சார்பாக ஒரு பாதுகாவலர் என எஃப்டி கணக்கை திறந்து பயன்பெறலாம்.
அஞ்சல் அலுவலக எஃப்டி கணக்கு வட்டி விகிதங்களின் சிறப்பம்சங்கள்:
– 1 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.50% pa
– 2 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.70% pa
– 3 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.80% pa