முதலீட்டை பெருக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்! முதலீடே செய்யாமல் பணம் பெற இதை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

முதலீட்டை பெருக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்! முதலீடே செய்யாமல் பணம் பெற இதை செய்யுங்கள்!!

நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாமல் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்க போஸ்ட் ஆபிஸ் பல வகை வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்திய அரசாங்கத்தின் கீழ் போஸ்ட் ஆபிஸ் இயங்கி வருவதால் தங்கள் முதலீடு பணம் குறித்த எவ்வித அச்சமும் பட தேவையில்லை.இந்தியாவில் உள்ள பொத்துறை வங்கி,தனியார் வங்கிகளை ஒப்பிடுகையில் போஸ்ட் ஆபிஸ் தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் பெண் குழந்தையின் பெற்றோராக இருந்தால் 7.6% வட்டி தரக் கூடிய செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.நீங்கள் 60 வயதை சந்திக்கும் மூத்த குடிகளாக இருந்தால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்திற்கு 7.4% வரை வட்டி வழங்கப்படுகிறது.

தங்கள் எதிர்கால வாழ்க்கையை வளமாக்க நினைப்பவர்கள் 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.இன்னும் RD,FD,MIS,NSC,KVP என்று பல முதலீட்டு திட்டங்கள் போஸ்ட் ஆபிஸில் உள்ளது.

ஆனால் முதலீடு எதுவும் செய்யாமல் வட்டி பெறும் இந்த ட்ரிக் உங்களுக்கு தெரியுமா? போஸ்ட் ஆபிஸில் எந்த ஒரு முதலீட்டு திட்டத்தை தொடங்குவதாக இருந்தாலும் சேமிப்பு கணக்கு அவசியமாகும்.சேமிப்பு கணக்கை ரூ.500 டெபாசிட் செய்து தொடங்க வேண்டும்.இந்த சேமிப்பு கணக்கிற்கு தற்பொழுது 4% வட்டி வழங்கப்படுகிறது.உங்கள் சம்பள பணத்தில் குறைந்தது 25% தொகையை தபால் சேமிப்பு கணக்கில் இருப்பாக வைத்து வந்தால் அதிக வட்டி கிடைக்கும்.இந்த முறையிலும் பணத்தை சேமித்து வட்டி பெறலாம்.