தபால் நிலையத்தில் கணக்கு தொடங்குகிறீர்களா? அதற்கு முன்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!

0
195

தபால் நிலைய சேமிப்பு கணக்கு என்பது நாட்டில் மிகவும் நன்கறியப்பட்ட மற்றும் எளிதில் அணுகக் கூடிய சேமிப்பு கணக்குகளில் ஒன்றாக இருக்கிறது. அதோடு வருமானவரிச் சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ 10,000 வரையிலான வட்டி வரி விலக்கு பெற தகுதியுடையது.

ஆகவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

தகுதி: தகுதி வாய்ந்த அல்லது மூத்த குடிமக்கள் மற்றும் கணக்கை ஆரம்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 வயதுடைய மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் சார்பாக ஒரு பாதுகாவலரும், இந்த கணக்கை ஆரம்பிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

வட்டி விகிதம்: தற்சமயம் இந்த கணக்கிற்கு வருடத்திற்கு 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மாதம் தோறும் 10ம் தேதி மற்றும் கடைசி நாளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினடிப்படையில் வட்டி விகிதம் கணக்கிடப்படும். இந்த காலகட்டத்தில் மீத தொகை 500 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வட்டி எதுவும் வரவு வைக்கப்பட மாட்டாது.

டெபாசிட் மற்றும் திரும்ப பெறுதல்: குறைந்தபட்ச வைப்புத் தொகை 500க்கும் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. அதோடு குறைந்தபட்ச தொகை 500 ரூபாய்க்கு குறையும் எந்த பணமும் அனுமதிக்கப்படாது என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் கணக்கு இருப்பு குறைந்தபட்சம் 500 ரூபாயாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கணக்கு பராமரிப்பு கட்டணமாக 50 ரூபாய் பிடிக்கப்படும் இருப்பு பூஜ்ஜியமாக மாறிபோனால் கணக்கு தானாகவே மூடப்படும்.

அமைதியான கணக்கு: ஒரு கணக்கிலிருந்து தொடர்ந்து 3 நிதி ஆண்டுகளுக்கு எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லையென்றால் அந்த கணக்கு செயலற்ற கணக்காக கருதப்படும். அதனை மறுபடியும் திறக்க ஆவணங்கள் மற்றும் தபால் நிலைய பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றுடன் ஒருவர் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தபால் அலுவலக த்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மற்ற வசதிகள்: காசோலை புத்தகம், ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, உள்ளிட்ட மற்ற வசதிகளும் இதில் இருக்கும் என்கிறார்கள்.

Previous articleதமிழக சுகாதாரத் துறையில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு!
Next articleசுமுகமான உடன்பாடு ஏற்படுமா? அல்லது வேலை நிறுத்தமா? அமைச்சர்!