வேலையே செய்யாமல் மாதம் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்! உடனே இதை செய்யுங்கள்!

Photo of author

By Sakthi

தபால் நிலையத்தில் மாத வருமானம் திட்டத்தில் பணத்தை சேமிக்க நினைப்பது நல்ல முடிவாகும். சமீபகாலமாக இந்தத் திட்டத்தில் வேலைக்கு செல்லும் கணவன்-மனைவி கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் சேர்ந்து பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் ஆகியோர் இணைந்து பணத்தை சேமித்து வருகிறார்கள்.

நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் வழங்கும் இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தபால் நிலையத்தில் செயல்பாட்டிலிருக்கும் கணக்கில் முதலீடு செய்வதன் மூலமாக மாதத்திற்கு சற்றேறக்குறைய 5000 ரூபாய் வட்டியுடன் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

தபால் நிலையத்தில் மாத வருமானம் திட்டத்தின் கீழ் ஒருவர் தனி கணக்கு அல்லது கூட்டு கணக்கை ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு தனி கணக்கிற்கு ரூபாய் 4.5 லட்சமாகவும், கூட்டு கணக்குகளுக்கு 9 லட்சமாகவும், இருக்கிறது.

ஒரு தனிநபர் அதிகபட்சமாக 4.5 லட்சத்தை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் கூட்டு கணக்கில் இருவர் சேர்ந்து 9 லட்சம் வரையில் முதலீடு செய்யமுடியும் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.6 சதவீதம் வருடம் வட்டி வழங்கப்படுகிறது. தபால் நிலைய மாத வருமானம் திட்டத்தின் கீழ் கூட்டு கணக்கில் 9 லட்சத்தை முதலீடு செய்தால் 1 வருடத்திற்கு நீங்கள் பெறும் மொத்த வட்டி 6.6 சதவீதமாக ரூ 59,400 என இருக்கும் இதனைப் 12டால் வகுக்க வேண்டும்.

அதாவது ஒரு வருடத்தில் இருக்கும் மாதங்களின் எண்ணிக்கை கணக்கீடுகளின்படி தபால் நிலைய கணக்கு மூலமாக உங்கள் மாத வருமானம் 4,950 ஆக இருக்கும் கூட்டு கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும், தனி கணக்கு வைப்பு தொகை பாதியாகக் குறைவதால் வட்டி மாதத்திற்கு 2,475 ஆக இருக்கும்.

தபால் அலுவலக கணக்கை எப்படி திறப்பது?

தபால் அலுவலக மாத வருமான கணக்கை திறப்பதற்கு அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதோடு ஆதார், வாக்காளர், அடையாள அட்டை மற்றும் விருப்பங்கள் உள்ளிட்ட அடையாள சான்று 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் முகவரி சான்று போன்ற அடிப்படை ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

இந்த கணக்கை திறக்க விருப்பமுள்ளவர்கள் கணக்கை திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை 1,000 என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அஞ்சலகத்தில் வழிகாட்டுதல்களின்படி அதன் பின் வைப்புத்தொகை ரூபாய் 1000 மடங்குகளில் இருக்க வேண்டும். இந்த விதி 2020 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது அருகிலுள்ள தபால் நிலையத்தில் தங்களுடைய கணக்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.