POST OFFICE SAVINGES SCHEME: நீங்கள் லட்சாதிபதியாக நல்ல வாய்ப்பு!! கை நிறைய வட்டி வழங்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

POST OFFICE SAVINGES SCHEME: நீங்கள் லட்சாதிபதியாக நல்ல வாய்ப்பு!! கை நிறைய வட்டி வழங்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

தற்பொழுது தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.பாதுகாப்பான முதலீடு மற்றும் நல்ல லாபத்தை அளிக்க கூடிய திட்டங்களால் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பிரபலமடைந்து வருகிறது.

நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு 50% வரை கடன் வழங்கப்படுகிறது.இந்த கடனிற்கான வட்டி விகிதம் 2% ஆகும்.தற்பொழுது இந்த திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் 5 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகை ரூ.3,00,000 ஆக இருக்கும்.அதனோடு வட்டி தொகை ரூ.56,830 வழங்கப்படும்.

அதேபோல் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் 5 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகை ரூ.1,80,000 ஆக இருக்கும்.அதனோடு வட்டி தொகை ரூ.34,097 வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ரூ.2000 முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் 5 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு தொகை ரூ.1,20,000 ஆக இருக்கும்.அதனோடு வட்டி தொகை ரூ.22,732 வழங்கப்படும்.

RD கணக்கு தொடங்கி தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு டெபாசிட் செய்யாமல் இருந்தால் உங்கள் கணக்கு க்ளோஸ் ஆகிவிடும்.இந்த திட்டத்தில் முன்கூட்டியே டெப்பாசிட் செய்தால் மாதாந்திர பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.

RD திட்டத்தில் முதலீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

1)தபால் ஆபிஸ் சேமிப்பு கணக்கு புத்தகம்

2)ஆதார் அட்டை

3)பான் அட்டை

4)ஓட்டர் ஐடி

5)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ