இந்திய அஞ்சல் அலுவலகம் நாட்டு மக்களின் சேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குழந்தைகள்,பெண்கள்,விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க கூடிய சேமிப்பு திட்டங்கள் இருப்பதால் முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கிறது.இதனால் இந்திய அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு
செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான RD-க்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.தற்பொழுது இத்திட்டத்தில் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் 6.70% வட்டி கிடைக்கும்.
RD திட்டத்தில் முதலீடு செய்ய ரூ.100 செலுத்தி கணக்கு திறக்க வேண்டும்.பிறகு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை கணக்கில் செலுத்தி வர வேண்டும்.குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி முதலீட்டை துவங்கலாம்.இத்திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.
முதலீட்டிற்கான முதிர்வு காலம் முடிந்து மேலும் ஐந்தாண்டுகளுக்கு அதை நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.இதனால் முதிர்வு தொகை,வட்டி மற்றும் கூட்டு வட்டி பெற முடியும்.
இத்திட்டத்தை தொடங்க ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,பான் கார்டு,பாஸ்போர்ட் சைஸ் போட்டோஉள்ளிட்டவை தேவைப்படும்.
நீஙகள் தினமும் ரூ.66 எடுத்து வைத்து வந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.2000 சேமிக்க முடியும்.இதை RD-யில் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் ரூ.1,20,000 சேமிக்க முடியும்.இதற்கான வட்டி ரூ.22,732 கிடைக்கும்.ஆகவே இத்திட்டத்தின் முதிர்வு தொகையாக ரூ.1,42,373 பெற முடியும்.
அதேபோல் தினமும் ரூ.333 சேமித்து ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 செலுத்தி வந்தால் ஐந்து வருட முடிவில் ரூ.6,00,000 ரூபாய் சேமிக்க முடியும்.இதற்கான வட்டி ரூ.1,13,659 கிடைக்கும்.இத்திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும்.நீங்கள் RD தொடங்கி ஒரு வருட காலத்திற்கு பிறகு 50% வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.