நீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!

0
181

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்த ஒரு விஷயம் இந்த நிதி ஆண்டிற்கான வட்டியில் மாற்றம். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தபால் நிலையத்தில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.

இதன் காரணமாக, தொடர்ந்து வரும் அதே வட்டி முறையை கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது தபால் நிலையத்தில் இருக்கும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டம் பொதுவான சேமிப்பு திட்டம் இவற்றிற்கு வழங்கப்படும் வட்டி விபரம் தற்போது அது தொடர்பாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வருடத்திற்கு 4 சதவீதம் வரையில் வட்டி கணக்கை திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் மட்டுமே அதிகபட்ச வர வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மாதத்தின் 10ம் தேதிக்கும், மாத இறுதிக்கும், இடைப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையினடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

5 வருடம் அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் மாதத்திற்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் டெபாசிட்களில் இங்கே பெறலாம். அதிகபட்ச வரம்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

தபால் நிலையத்தில் டைம் டெபாசிட் அக்கவுண்ட் குறிப்பிடத்தக்க விதத்தில் ஒரு வருடம் இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட கால வைப்புத் தொகைக்கு வட்டி விகிதம் ஒவ்வொன்றுக்கும் அஞ்சு புள்ளி ஐந்து சதவீதமாகும் இதற்கு நடுவில் ஐந்தாண்டு கால வைப்புத் தொகையின் விகிதம் 6.7 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 7.4 சதவீதம் சம்பாதிக்கலாம் வட்டி காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80 cன் மரனுக்காக தகுதி பெறுகிறது.

மாதாந்திர வருமானத் திட்டம் இங்கே வட்டி விகிதம் வருடத்திற்கு 6.6 சதவீதம் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றை கணக்கில் ரூபாய் 4.5 லட்சம் மற்றும் கூட்டு கணக்கு ஒன்பது லட்சம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிவடைந்த உடன் மற்றும் முதிர்வு வரையில் வட்டி செலுத்தப்படும்.

இதே போல தபால் நிலையத்தில் இருக்கும் மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விபரங்கள் தொடர்பாக அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

Previous articleசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!
Next articleபொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!