போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

Photo of author

By Murugan

போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் பணி!.. விண்ணப்பிக்க கடைசி நாள் எதுன்னு தெரியுமா?..

Murugan

driver

TN Govt jobs: தமிழக அரசின் துறைகளில் முக்கியமானது போக்குவரத்து துறை. பல ஆயிரம் பேருந்துகள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது இதில் குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அரசு பேருந்துகளிலும் சாதாரண காட்டண பேருந்து, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏசி என பல வகை இருக்கிறது.

இதில் எல்லாமே டிக்கெட் கட்டணங்கள் மாறுபடும். யாருக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் பயணிப்பார்கள். ஒருபக்கம் பெண்களுக்கு கட்டணிமில்லா பேருந்துகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட தூரங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். நெடுதூரம் பயணிக்க முடியாது.

ஒருபக்கம் போக்குவரத்து துறையில் ஆயிரக்கணக்கான நபர்கள் பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்து துறையில் பல பிரிவுகளும் இருக்கிறது. இதில், பெரும்பாலும் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அரசு ஓட்டுனர்களும், நடத்துனர்களும் ஒய்வு பெரும்போது புதிய ஊழியர்களை பணியமர்த்துவார்கள்.

அந்தவகையில், போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த பணியில் சேர விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு பேருந்தில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம், இது ஒப்பந்த  பணியா அல்லது நேரிடையான அரசு பணியா என்கிற முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி விரைவில் போக்குவரத்து கழகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.