தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற ரசிகர்களுக்கும் மிகவும் பிரபலமான நடிகை திரிஷா அவர்கள் தான். அப்படிப்பட்ட த்ரிஷா அவர்கள் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி பல முன்னணி நடிகர்களுடனும் இரண்டு தலைமுறை கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கடைசியாக கோட் திரைப்படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து நடனமாடி சென்றார். இப்பொழுது அஜித் கமல்ஹாசன் மோகன்லால் ராம் சிரஞ்சீவி ஆகியோரின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்படி தமிழ் மட்டும் இன்றி மலையாளம் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை திரிஷா அவர்களின் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளதாக பதிவிட்டு இருக்கிறார்.
திரிஷாவின் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது :-
கிறிஸ்மஸ் பண்டிகையான என்று நடிகை திரிஷாவின் வீட்டில், ” என் மகன் இறந்து விட்டான் ” என்பது போன்ற பதிவினை இட்டு ட்விட் செய்துள்ளார். இது இணையத்தில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.
தனது வீட்டில் மிகவும் ஆசையாக வளர்த்த வளர்ப்பு நாயான சோரோ என்று நாய்க்குட்டி இன்று உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதனை தான் தனது மகன் இறந்து விட்டதாக திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், தன்னை நன்கு புரிந்து கொண்ட அனைவருக்கும் இனி என்னுடைய வாழ்க்கை பொருளற்றதாக மாறிவிட்டது என்பது நன்றாக புரியும் என்றும் மிக வருத்தத்துடன் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.