தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

Photo of author

By Parthipan K

தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

Parthipan K

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். மேலும் இத்தனை நாட்களாக அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் கடும் போட்டி நிலவ இருப்பது உறுதி.

இவ்வாறு இருக்க தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுக கட்சி அதிர்ந்து  போயுள்ளது.

இந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும், மு க ஸ்டாலின் நடவடிக்கைகளையும் பேச்சையும் கிண்டலடித்து வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதாவது எடப்பாடி பழனிசாமி ‘மண்ணின் மைந்தன்’ என்றும், மு க ஸ்டாலின் ‘அறிக்கை நாயகன்’ என்றும் குறிப்பிட்டுள்ளது திமுக கட்சியினரை திக்குமுக்காட செய்துள்ளது.