முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.

0
223
#image_title

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு! 

முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான    தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கான  (டான்செட்2023 ) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 14 ந் தேதி ) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை 20 -ஆம்தேதி முதல், மே-20 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் – 25ஆம் தேதி காலையிலும், , எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் – 25 ஆம் தேதி மாலையிலும் பயனாளர்கள் எழுதினார்கள்.  CEETA-PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை மார்ச் 26- ஆம் தேதி எழுதினர்.
தேர்வினை எழுதிய 36,403 மாணவர்களுக்கான முடிவுகள்( ஏப்ரல் 14 ந் தேதி ) இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும் இவர்களுக்கான தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்துக் தெரிந்துக் கொள்வதுடன், மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல், மே 20 – ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Savitha