பிரசவித்த பிறகு தென்படும் Stretch Marks ஒரு வாரத்தில் மறைய.. இந்த பேஸ்டை வயிற்றில் பூசுங்கள்!!

Photo of author

By Divya

பெண்களின் கர்ப்ப காலத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் தழும்புகள் உருவாவது இயல்பான ஒரு விஷயம் தான்.இந்த தழும்புகள் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றுங்கள் போதும்.

தீர்வு 01:

*கற்றாழை துண்டு

அடிவயிற்றில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.இதற்கு முதலில் கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதன் தோலை ரிமூவ் செய்துவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜார் எடுத்து சுத்தம் செய்த கற்றாழை ஜெல்லை அதில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஸ்ட்ரெட்ச் மார்க் மீது அப்ளை செய்தால் அவை ஒருசில வாரங்களில் மறைந்துவிடும்.

தீர்வு 02:

*வெள்ளரி
*எலுமிச்சை சாறு

முதலில் வெள்ளரிக்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை ஸ்ட்ரெட்ச் மார்க் மீது அப்ளை செய்தால் அவை ஒருசில வாரங்களில் மறைந்துவிடும்.

தீர்வு 03:

*தேங்காய் எண்ணெய்
*பாதாம் எண்ணெய்

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க் மீது அப்ளை செய்தால் அவை ஒருசில வாரங்களில் மறைந்துவிடும்.

தீர்வு 04:

*விளக்கெண்ணய்

தினமும் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தீர்வு 05:

*முட்டையின் மஞ்சள் கரு
*எலுமிச்சை சாறு
*பாதாம் பேஸ்ட்
*காய்ச்சாத பால்

முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருந்து மஞ்சள் கருவை மட்டும் பிரித்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி பாதாம் பேஸ்டை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து அடிவயிற்று பகுதியில் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் சீக்கிரம் மறைந்துவிடும்.