தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு! குஷியில் மாணவ-மாணவிகள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 மற்றும் 11 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மே மாதம் இறுதியில் முடிவடைகிறது.

இதற்கு நடுவே 10, 11, 12, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளனர்.

இவை அனைத்தும் ஜூன் மாதம் 2-வது வாரம் வரையில் நடைபெறும். அதன் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 4ம் வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. மிக விரைவில் பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

இதன் காரணமாக, ஏற்படும் கற்றல் இழப்பை சரி செய்யும் விதத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.