உடனே இதை செய்யுங்கள்! இல்லையென்றால் அபராதம் தான்!

0
55

தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இல்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தான் காரணம் என கூறுகிறார்கள். அதிக அளவிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் வழங்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் அட்டை அல்லது வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க தவறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைக்கும் செயல்முறைகள் எளிமையாக்கபட்டிருக்கின்றன. ஆகவே எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்குடன் உங்களுடைய பான் அட்டையை இவ்வாறு இணைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

ஆன்லைன் மூலமாக இணைப்பதற்கு எஸ்பிஐ இண்டர்நெட் பேக்கிங் போர்தல் மூலமாக பான் கார்டு இணைக்கப்படுகிறது இதற்காக முதலில் www.onlinesbi.com இந்த தளத்திற்கு செல்ல வேண்டும். திரையின் இடது பேனலில் தோன்றும் என்னுடைய கணக்குகள் என்பதன் கீழ் சுய விவர பான் பதிவுக்கு செல்லவும்.

கணக்கு என் மற்றும் பான் எண்ணை தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்க வேண்டும் உங்களுடைய கோரிக்கை தற்சமயம் செயலாக்கத்திற்கு ஆக எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்.

உங்கள் கோரிக்கையை 7 நாட்களில் பிறகு செயல்படுத்தும் அதன் நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

நேரடியாக எஸ்பிஐ கிளை மூலமாக வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்கும் முறை என்ன என்பதை இப்போது பார்க்கலாம் உங்கள் அருகிலுள்ள எஸ்பிஐ கிளைக்கு செல்ல வேண்டும் உங்களுடைய பான் கார்டின் நகலை எடுத்து செல்ல வேண்டும்.

அதோடு அதற்காக உள்ள கோரிக்கை படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும் இந்த படிவத்தை பான் கார்டு ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றின் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான சரிபார்ப்புக்கு பிறகு வங்கி கணக்குடன் பான் கார்டு இணைப்பு கிளை மூலம் செய்யப்படும் இணைப்பின் நிலை தொடர்பாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

நீங்கள் இன்டர்நெட் பேங்கிங்கில் பதிவு செய்யவில்லை என்றால் டெபிட் கார்ட் விவரங்களை பயன்படுத்தி உங்கள் பான் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.