மூன்று மாநிலங்களின் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு!! தேர்தல் ஆணையம் தீடீர் அறிவிப்பு!!

Photo of author

By Vinoth

டெல்லியில் இன்று அவரசர ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் கூட்டப்பட்டது. அதில் கேரளா, பஞ்சாப், மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களை சேர்ந்த்த 14  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் 20-ம் தேதிக்கு  தேர்தல் தேதியை மாற்றி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 20-ம் தேதி ஓரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வருகிற நவம்பர் மாதம் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 13-ம் தேதி மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் முடிந்த பின் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும்  இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் ஓரு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற நவம்பர் மாதம் 13-ம் தேதி நடைப்பெறும்.

அதனை அடுத்து மகாராஷ்டிராவில் ஒரு சட்டமன்ற தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது 14 சட்டசபை தொகுதகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டள்ளது.

கேரளா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பவர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.