மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்வுகளை நடத்துவதாக கூறப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்,பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.இதற்கான விண்ணப்பப்பதிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 6 முதல் நடைப்பற்றது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தேர்வானது ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வு ஜூலை 26 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தத் தேர்வை தமிழகத்தில் உள்ள சென்னை கோவை,கடலூர்,காஞ்சிபுரம் நாமக்கல்,கரூர்,மதுரை,நாகர்கோவில் ,தஞ்சாவூர், திருச்சி ,திருநெல்வேலி, சேலம்,வேலூர்,திருச்சி ஆகிய இடங்களிலும் மேலும் நாடு முழுவதும் 154 இடங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை செய்து வருகின்றனர்.பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என மற்றொரு தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே தேசிய தேர்வு முகமை கொரோனா பாதிப்பு குறைந்த உடனே தேர்வை நடத்தலாம் என ஆலோசித்து வருகிறது. இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை.