எதிர்கட்சிகளின்  அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! 

0
92
Postponement of the Monsoon session shortly after it started due to opposition parties!!
Postponement of the Monsoon session shortly after it started due to opposition parties!!

எதிர்கட்சிகளின்  அமளியால் தொடங்கிய சிறிது நேரத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!

இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம்  திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது, வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இதனையடுத்து  மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்த உள்ளதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் அறிவித்திருந்தது.  இந்த நிலையில் கலவரத்தில் மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றி விவாதிக்க இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் வாக்கு வாதத்தியில் ஈடுப்படனர்.

இதனையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் , நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!!
Next articleஇனி வாட்ஸ் ஆப் தகவலை யாராலும் பார்க்க முடியாது!! நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!!