பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு! அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஆட்டம் காட்டும் வெயிலால் மாணவர்கள் கடும் அவதி!!
இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக தமிழ்நாட்டினை தொடர்ந்து மற்றோர் மாநிலத்திலும் பள்ளித் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து ஆறு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 12 என்றும், 1 முதல் 5 வகுப்பிற்கு ஜூன் 14 என்றும் தள்ளி வைக்கப்பட்டு தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலம் பாட்னாவில் கடும் வெப்பத்தின் காரணமாக மக்கள் அவதிபடுகின்றனர். ஏற்கனவே வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 18 ஆக தள்ளி வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது இன்னும் வெப்பம் குறையாத காரணத்தால் ஜூன் 24 வரை பள்ளிகள் திறக்கும் தேதி நீடித்துள்ளது.
மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் திறப்பு தேதி ஜூன் 24 தான் என்று பாட்னா மாவட்ட அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.