ரூ 1 கோடி வழங்கியது போத்திஸ் பட்டு நிறுவனம்!

Photo of author

By Kowsalya

ரூ 1 கோடி வழங்கியது போத்திஸ் பட்டு நிறுவனம்!

Kowsalya

அனைவரும் தங்கள் சார்பில் முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி அளித்து வரும் நிலையில் போத்தீஸ் நிறுவனமானது ஒரு கோடி ரூபாயை போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது.

கொரோனா வின் இரண்டாவது அலை அனைவரையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அனைவரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

திரைக்கலைஞர்கள், பல்வேறு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். ஏன் சிறுவர்கள் கூட தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர்.

இப்பொழுது போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 கோடி வழங்கியுள்ளது. சென்னை தலைமையகத்தில் போத்திஸ் பட்டு ஆலயத்தின் இயக்குனர் ரமேஷ் போத்தி அவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.

இதற்கு மு க ஸ்டாலின் அவர்கள் போத்தீஸ் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.