மின் துண்டிப்பு இனி வரவே வராது.. கரண்ட் பில் கட்டுவதில் புதிய மாற்றம்!! மின்சார வாரியத்தின் மாஸ் அறிவிப்பு!!
தமிழக மின்வாரியம் ஆனது மக்களுக்கு ஏற்ற வகையில் பல வித அப்டேட்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மின் இணைப்பு பெறுவது முதல் கட்டணம் வரை மேலும் பெயர் நீக்கம் பெயர் மாற்றுதல் என அனைத்தையும் ஒரே இணையத்தில் செய்து கொள்ளும் செயலி ஒன்றை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் உடனுக்குடன் தங்களது தேவைகளை ஒரே இடத்தில் செய்து கொள்வதுடன் காலவரையும் குறையும் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு அடுத்தபடியாக மின் திருட்டை தடுப்பது குறித்து தங்களது விவரங்களை தெரிவிக்காமலேயே புகாரளிக்கும் வகையில் ஓர் இணைய வழிதளத்தை கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டின் அருகில் ஏதேனும் மின் திருட்டு ஏற்பட்டால் அதனை தங்கள் விவரம் கூறாமல் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மின் இணைப்பு கட்டுவது குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால் ரீடிங் எடுத்தும் சில பேர் இதனை மறந்து விடுகின்றனர்.
இவ்வாறு மறப்பதால் பீஸ் கேரியர் பிடுங்கும் நிலை ஏற்படுகிறது.இதனையெல்லாம் தவிர்க்க மக்களுக்கு நினைவூட்டும் வகையில் மின்வாரியமானது ஓர் குறுஞ்செய்தி ஒன்றை அவர்களது செல்போன் நிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்த குறுஞ்செய்தியானது மின் கட்டணம் செலுத்த மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் அனுப்புவதாகவும் அதனுடன் கட்டண தொகை குறித்த யுபிஐ யும் அனுப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் மின் கட்டணம் குறித்து அறிந்து கொண்டு விரைந்து கட்ட முடியும்.இது பலருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளது.