இரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து?
கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்ந்தது.அதனை தொடரந்து மின்வாரிய துறை பல்வேறு நடவடிக்களைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்தவகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்னை கண்டிப்பாக இணைக்க வேண்டும் இல்லையெனில் அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின் மானியத்தை பெற முடியாது என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.ஆனால் பலரும் அதனை இணைக்காமல் இருந்த காரணத்தினால் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனாலும் 20 சதவீதம் பேர் இந்த இணைப்பை மேற்கொள்ளாமல் இருந்தனர்.அதனால் இம்மாதம் 15 ஆம் தேதி வரை காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை இரவு 10 மணி முதல் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அதன் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகின்றது.அதனால் நாளை இரவு 10 மணி வரை தமிழ்நாடு அரசு இனையதளத்தில் புதிய விவரங்கள் எதுவாக இருந்தாலும் அதனை பதிவேற்றம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வரும் திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் இணையதளத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.