துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது நமது தமிழகத்தில் ஆட்சி மாறிய சூழலில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததையும் மாற்றி அமைத்து வருகின்றனர். தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்ற புகாரை கூறினார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனதன் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று திமுகவினர் கூறினர். அதனை அடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அவற்றுள் என்ற பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது.
அங்கு பல அவசரகால பணிகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தற்பொழுது தமிழகத்தில் மின்சார துறையில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த அவசரகால பணியின் போது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அவ்வாறு மின் துண்டிக்கப்படும் பகுதிகளை மின்சார வாரியம் பட்டியலிட்டு கூறியுள்ளது. அந்த வகையில் இனியனூர் ,அல்லித்துரை ,போதாவூர் ,கீழ வயலூர் சுண்ணாம்புகாரநண் பட்டி, அதவத்தூர் சந்தை, அயிலா பேட்டை,புலியூர் ,தாயனூர், சுப்பையாபுரம் , மல்லியம்பத்து மஞ்சான் தோப்பு ,வியாழன் மேடு , கோப்பு, மேலப்பட்டி,பள்ளக்காடு கொய்யாத்தோப்பு ,குழுமணி ,கிரி கல்பட்டி ,ஒத்தக்கடை ,பெரிய கருப்பூர்,போசம்பட்டி ,வயலூர் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் மின்சாரம் தொடர்பாக ஏதேனும் மக்கள் வர தெரிவிக்கப்பட்டால் அதனை இரண்டு நாட்களுக்குள் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அதேபோல மக்களுக்கு பயன்தரும் வகையில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை யும் நடைமுறைக்கு கொண்டு வருவதாக கூறியுள்ளார்.