ஜப்பான் ஒரு மாபெரும் தொழில் நுட்பநாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகப் போரின்போது இரண்டு அணுகுண்டுகளை தாங்கிய நாடு அந்த இரண்டு அணுகுண்டுகள் காரணமாக ஹிரோஷிமா, நாகசாகி, என்ற இரண்டு தொழில் நகரங்கள் மொத்தமாக சாம்பலாகிப் போயின.இருந்தாலும் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான்.அதையெல்லாம் கடந்து இன்று ஒரு தொழில் நுட்ப நாடாக வளர்ந்திருக்கிறது ஜப்பான்.
ஜப்பான் அடிக்கடி நில நடுக்கத்தை சந்திக்கும் ஒரு நாடாக இருக்கிறது.உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் இருபது சதவீதம் ஜப்பானில்தான் ஏற்ப்படுகிறது.
ஜப்பானில் இருக்கின்ற இஷினோமகி, இஷினோமகி ஷி, மியாகி ஆகிய நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆக இருந்து வரும் இஷினோமகிக்கு தென்கிழக்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக, ஏற்பட்ட சேதம் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. சமீபத்தில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.