மாநகராட்சி ஆணையர் விடுத்த எச்சரிக்கை!

0
81

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் பரவல் மிக வேகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பலவாறு முயற்சி செய்து வருகின்றன. அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து வருகின்றன. ஆனாலும் இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காரணம் இந்த நோய் தொற்றின் முதல் அலை இருந்த சமயத்தில் பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வு தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, மத்திய, மாநில அரசுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை பொதுமக்கள் கண்டு கொள்ளாததால் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு நேர ஊரடங்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. அதேசமயம் அந்த நேரத்தில் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.இனி வரும் வாரங்களில் சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு சென்ற வாரத்தில் தெரிவித்திருந்தது.

இதனால் நேற்று அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவிக்கும்போது, ஈரோடு மாவட்டத்தில் நோய் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தரவை மீறி மாநகராட்சியில் எங்காவது இறைச்சிக் கடைகள் செயல்படுவது தொடர்பாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், இதற்காக மாநகராட்சி பகுதியில் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதே போல தமிழகம் முழுவதும் இந்த உத்தரவு பின்பற்றப்படும் அதை உறுதி செய்ய அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.