விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

Photo of author

By Murugan

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

Murugan

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் அவர் உறுமினார்.

அதோடு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பில் விஜயும் இடம் பிடித்திருக்கிறார். சி-வோட்டர் என்கிற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீத வாக்குகளை பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருக்க, 18 சதவீத இடத்தை பிடித்து விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும், 10 சதவீத இடத்தை பிடித்து எடப்பாடி பழனிச்சாமி 3வது இடத்திலும், 9 சதவீத வாக்குகளை பெற்று பாஜக தலைவர் அண்ணாமலை 4வது இடத்திலும் இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒரே ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம்.

இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் விஜயை விமர்சித்துள்ளார். முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள். விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்’ என பேசியிருக்கிறார். சீனிவாசன் சில வருடங்களுக்கு முன்பு இந்திய குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 670 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.