500 ரூபாய்க்கு 1.5 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபிசில் அட்டகாசமான சேமிப்பு திட்டம் 

Photo of author

By Divya

500 ரூபாய்க்கு 1.5 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபிசில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்

இந்தியாவில் நம் முதலீட்டு பணத்திற்கு 100% கேரண்டி கொடுக்க கூடிய நிறுவனமாக அஞ்சல் துறை உள்ளது.இதில் பல பயனுள்ள திட்டங்கள் இருப்பதினால் உரிய நேரத்தில் முதலீடு செய்து லாபத்தை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலி தனம்.

லட்சங்களில் லாபத்தை அள்ளி கொடுக்க கூடிய போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பல இருந்தாலும் அதன் முதலீடு தொகை பெரிதாக இருப்பதினால் ஏழை,எளிய மக்கள் தங்களுக்கு ஏற்ற சிறுசேமிப்பு திட்டம் எது என்பது குறித்து தெரிந்து கொள்வதில் குழப்பமடைகின்றனர்.

அதன்படி மாதம் ரூ.250,ரூ.500 மட்டும் செலுத்தி சேமிக்க கூடிய 3 முத்தான திட்டங்கள் குறித்து கொள்ளுங்கள்.முதலில் மாதம் ரூ.500 செலுத்தி சேமிக்க கூடிய பிபிஎப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு : PPF Post office scheme in tamil

இவை 15 ஆண்டுகால சேமிப்பு திட்டமாகும்.இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை ரூ.500 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.தற்பொழுது 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து ரூ.1,62,728 கிடைக்கும்.

அடுத்து பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சிறந்த திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளது.இதில் குறைந்தபட்சம் ரூ.250 அதிகபட்சம் ரூ.1.50 வரை வருடத்திற்கு முதலீடு செய்ய முடியும்.தற்பொழுது 8.2% வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து வந்தால் 21 வருடங்கள் கழித்து ரூ.2,77,103 முதிர்வு தொகையாக கிடைக்கும்.

அடுத்து சாமானிய மக்களுக்கு பயன்படும் திட்டமாக RD உள்ளது.இது ஐந்தாண்டு கால சேமிப்பு திட்டமாகும்.இந்த திட்டத்தில் 6.7% வட்டி வழங்கபடுகிறது.இந்த திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து வந்தால் 5 வருடங்கள் முதிர்வுத் தொகையாக ரூ.35,681 பெற முடியும்.