கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்!

Photo of author

By Vinoth

கடுமையான கேலிக்கு ஆளாகும் ஆதிபுருஷ்… இயக்குனரிடம் கோபத்தை வெளிப்படுத்திய பிரபாஸ்!

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ். இதனால் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அளவுக்கு அதிகமான பட்ஜெட் போடப்பட்டன. ஆனால் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும் பிரபாஸின் நடிப்பும் ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸோடு கீர்த்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் வெளியானது.

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமூகவலைதளங்களில் கேலிக்கு ஆளானது. மேலும் கார்ட்டூன் படம் போல இருப்பதாக ரசிகர்கள் மீம்களையும் ட்ரோல்களையும் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் மேல் பிரபாஸ் கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் பிரபாஸ் இயக்குனரிடம் கோபமாக “என் ரூமுக்கு வாங்க” எனக் கூறிவிட்டு செல்லும் வீடியோவை ரசிகர்கள் இதைப் பரப்பி வருகின்றனர்.

பிரபாஸ் அடுத்து சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.