பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் கொடுக்கப்பட்டு வந்த கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்படும் கடன் வரம்பு முத்ரா திட்டத்தின் நோக்கத்தை அடைய உதவியாக இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டு இருந்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 23 ஆம் தேதி ஜூலை மாதம் நடைபெற்ற 2024 – 25 கான மத்திய பட்ஜெட்டின் போது முத்ரா திட்டத்தினை குறித்து அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தருண் பிளஸ் என்ற புதிய பிரிவின் கீழ் 10 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள் கிடைக்கும் என்றும். இந்த திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் தொழிலதிபர்களை ஆதரிக்கவும், அவர்களின் தொழில்கள் உயர உதவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த திட்டத்தில் ஏற்கனவே கடன் பெற்றுள்ளவர்கள் தங்களது கடனை சரிவர கட்டி முடித்து இருந்தால் மீண்டும் இந்த புதிய திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடனை பெற தகுதியானவர்கள் கார்ப்பரேட் அல்லாத சிறு தொழில்கள், குறு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி, வணிகம், சேவை மற்றும் விவசாயம் சார்ந்த பிரிவுகளில் உள்ள தனிநபர்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம்.
தனி நபர் மற்றும் தொழில் பற்றிய சில தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை வழங்கினாலே இந்த திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித அத்தாச்சி மற்றும் உத்திரவாதம் போன்றவை தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.