மோடி நீ ஓர் சர்வாதிகாரி.. டெஸ்ட் டியூப் பேபி! மனுசனாயா நீ – பிரதமரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!!
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதை திருமாவளவன் வழங்கினார்.பின்னர் விருது விழா மேடையில் பேசிய பிரகாஷ் ராஜ்,பிரதமர் மோடி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எதிர்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் வசைபாடினர்.
தொடர்ந்து பேசிய அவர் மோடியை இனி மன்னர் என்று கூற முடியாது.அவர் ஜூன் 04 நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின்னர் தெய்வக் குழந்தையாகி விடுவார்.மோடியால் நாட்டிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ‘மனுசனாயா நீ’ என்று அவரை நம்மால் திட்ட முடியாது.தெய்வம் சோதிக்கிறது என்று தான் கூற முடியும்.
அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாட்டின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.அம்பேத்கரின் சிந்தனைகள் அவமானத்தால் பிறந்தவை.
மோடி ஒரு ஃபாசிஸ்ட்.அவர் மக்களுக்காக நிற்க மாட்டார்.மக்களின் பசி அறியாதவனுக்கு,அவர்களின் வியர்வையை தொடாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும்.மோடி ஒரு தெய்வ மகன் அல்ல.அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி என்று மோடி மற்றும் அவரின்10 ஆண்டுகால ஆட்சி குறித்து கடுமையான விமர்சனம் செய்தார்.
மேலும் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஓய்வு பெறும் போது தான் ஆர்.எஸ்.எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று சொல்கிறார்.அவர் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் என்ன மாதிரி தீர்ப்பு வழங்கி இருப்பார்.இவர்களெல்லாம் ஹிட்லர் போன்றவர்கள்.இவர்களை இயற்கையே ஜீரணிக்காமல் துப்பி விடும்.இது மாதிரியான ஆட்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விழா மேடையில் ஆவேசமாக பேசினார்.