பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

Photo of author

By Vijay

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

Vijay

Prakashraj criticizes Sarathukumar joining BJP

பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் வில்லன் நடிகராக மிரட்டி வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கும் அவரின் பாஜக கட்சிக்கும் எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதன்படி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த முறை கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார். இதன் மூலம் வழங்கப்பட்ட சீட்டில் ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கணவனும் மனைவியுமாக சேர்ந்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது, “பாஜக கட்சியில் கணவனும் மனைவியும் இணைந்திருக்காங்க. பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ” என கூறியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், “கருணாநிதி இருந்திருந்தால் அண்ணாமலை எல்லாம் முளைத்திருக்கவே மாட்டார். கருணாநிதிக்கு அந்த அளவிற்கு செல்வாக்கு இருந்தது. பாஜக நம் நாட்டின் சாபக்கேடு. பிரதமர் மோடி சரியான தலைவர் இல்லை” என எப்போதும் போல பாஜகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.