’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

Photo of author

By CineDesk

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

CineDesk

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன

முதலில் இந்த படத்தில் சூரி நடிப்பதாகவும், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் வந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த்-பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் ’படையப்பா’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிறுத்தை சிவா இயக்கத்தில், டி. இமான் இசையில், சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரி, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர்களை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் அடுத்த நட்சத்திரம் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்