கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல்வேறு திரைக்கலைஞர்கள், நடிகர்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஈடுபட்டுள்ளனர்.
தற்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது பிறந்தநாள், புது பட போஸ்டர்கள் என எதற்கெடுத்தாலும் ஹேஷ்டேக் என்பதை வைத்து டிரெண்ட் செய்கிறார்கள். தற்போது இது கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது.
இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தனர். அதில் அஜித் அறிமுகமாகி நடித்த “அமராவதி” திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதனை வைத்து “#28YrsOf AjithismCDPBlast, #28YrsOfAjithism” என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
இதில் அஜித்திற்கு என பிரத்யேகமான போஸ்டர்களை உருவாக்கி உள்ளனர். அதை பிரபலங்கள் வாயிலாகவும், ரசிகர்களும் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இதனை பிரபல நடிகரான பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பிரத்தியேக போஸ்டரை வெளியிட்டு, அஜித் தான் எனக்கு தோல்விகளை கற்றுக் கொடுக்கிறார் என அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,
A name which strgthened my dream to be an actor;A name which taught me to be self made;A name which fueled me to move ahead with failures;A name which held me together @ difficult times;A name that makes me a fighter who never givs up #Thala#28YrsOfAjithismCDPBlast @Thalafansml pic.twitter.com/hy1LPI3nLI
— Prasanna (@Prasanna_actor) July 26, 2020
“ஒரு நடிகராக வேண்டும் என்ற எனது கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்; சுயமாக உருவாக்க எனக்கு கற்றுக் கொடுத்த பெயர்; தோல்விகளுடன் முன்னேற என்னைத் தூண்டிய பெயர்; என்னை ஒன்றிணைத்த ஒரு பெயர் @ கடினமான காலங்கள்; என்னை ஒரு போராளியாக மாற்றும் பெயர் ஒருபோதும் கொடுப்பதில்லை”
என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.