ஸ்டாலினை முதல்வர் ஆக்கிய கையோடு பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்த அடுத்த பிராஜெக்ட்!

Photo of author

By Sakthi

பஞ்சாப் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரபல தனியார் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த்கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய நாட்டின் பல மாநிலங்களில் இவர் ஆலோசனையின்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் முதலமைச்சராக இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதலமைச்சராக திமுகவிற்கு 350 கோடி ரூபாய் பிரசாந்த் கிஷோர் கேட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

சென்ற 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைப்பதற்கு பிரசாந்த் கிஷோர் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் செல்ல இருக்கிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதற்கான காரணமாக சொல்லப்படுவது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அதோடு பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு உண்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சியாக தற்போது இருக்கும் இரண்டு கட்சிகளுக்கும் பிரசாந்த் கிஷோர் தான் தேர்தல் ஆலோசகராக இருந்தார் என்பது பலரும் அறிந்ததுதான்.