“செம்ம விருந்து வச்சிட்டீங்க…” விக்ரம் படக்குழுவினரை பாராட்டிய KGF இயக்குனர்!

0
297

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல்.

ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மாநிலங்கள் (பாலிவுட் தவிர்த்து) மற்றும் இந்தியாவுக்கு வெளியேயும் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.  இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தை தென்னிந்திய பிரபலங்கள் அனைவரும் பாராட்டிவிட்ட நிலையில் தற்போது KGF படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். தன்னுடைய ட்வீட்டில் “கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய மூவரையும் திரையில் ஒன்றாக பார்ப்பது ஒரு விருந்து. லோகேஷின் அனைத்து படங்களுக்கும் நான் ரசிகர்கள். ரோலக்ஸாக சூர்யா சார் நெருப்பாக இருக்கிறார்.” எனக் கூறி பாராட்டியுள்ளார்.

Previous articleகுப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!
Next articleஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here