ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

0
1378
#image_title

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பராக நடிக்கும் இவர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் விசில் போடு பாடலில் நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டுகளாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பிரசாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

80 கால கட்டங்களில் இயக்குனர், ஹீரோ மற்றும் வில்லன் என தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் தியாகராஜன். அவரது மகன் தான் நடிகர் பிரசாந்த். ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு விருப்பமில்லாமல் இருந்த இவருக்கு வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அறிமுகமான முதல் படமே ஹிட் ஆனதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இளைஞர்களுக்கு பிடித்த நடிகராக ஒரு ரவுண்ட் வந்தார். குறிப்பாக 90 களில் வெளியான இவரது படங்கள் மூலம் பெண்கள் விரும்பும் நாயகனாகவும் உருவானார். குறிப்பாக ஆணழகன், சாக்லேட் பாய், காதல் இளவரசன் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தகாரர் ஆனார். பின்னர் டாப் ஸ்டார் பட்டதுக்கும் சொந்தகாரர் ஆனார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன.

இதில் ஜீன்ஸ் படத்தில் நடிக்க அவர் 7 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் நடிகர் பிரசாந்த் அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் டூயட் பாடும் வகையில் இடம்பெற்ற அதிசயமே பாடலில் உலகில் உள்ள 7 அதிசயங்களும் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் ஜீன்ஸ் படத்தின் கதையை அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த சிலரிடம் சொல்ல அவர்கள் அதற்கு விருப்பம் காட்டாத நிலையில் அடுத்ததாக நடிகர் பிரசாந்த்திடம் கதையை சொல்கிறார். அவருக்கு இந்த கதை பிடித்துப் போக அப்போது தனக்கு வரவிருந்த 7 பட வாய்ப்புகளையும் மறுத்து விட்டு ஜீன்ஸ் படத்தில் நடித்ததாக கூறுகின்றனர்.