இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!

Photo of author

By Kowsalya

இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!

Kowsalya

 

அந்த காலகட்டத்தில் 13 14 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து  நமது பாட்டன் பாட்டிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் சமூகம் கல்வி படிப்பு வேலை என திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள்.

 

திருமண வயதை கடந்த பிறகு திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகினும் சரி, பெண்களாகினும் சரி திருமணம் ஆகவில்லை என்றால் அது ஒரு குறையாகவே கருதப்படுகிறது.

 

அதனால் முருகப் பெருமானை இப்படி இரவில் தங்கி வணங்கி வரும் பொழுது வெகு விரைவில் கெட்டி மேள சத்தம் வீட்டில் கேட்கும் என்பது உறுதி. இந்த திருமண பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் விதமாக அருள் புரிபவர் தான் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான்.

 

செவ்வாய்க்கிழமை இரவு அருகில் உள்ள முருகப்பெருமானின் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஆண்களாக இருந்தால் தனியாக செல்லலாம். பெண்களாக இருந்தால் பெற்றோருடன் செல்லலாம் வேறு யாரும் செல்லக்கூடாது.

 

அப்படி இரவில் வடமேற்கு மூலையில் இரவில் தங்கி காலையில் குளித்துவிட்டு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்க வேண்டும். முருகப்பெருமானின் திருமணத்திற்கு உதவிய விநாயகரை முதலில் வணங்க வேண்டும்.

 

பின் தம்பதிகளாக உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகனை அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து , இரண்டு நெய் விளக்குகளை ஏற்றி, சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

 

இப்படி செய்தால் வெகு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் முடிந்த பிறகு அதே போல் தம்பதிகளாக இரவில் தங்கி முருகனை வழிபடும் பொழுது அனைத்து பிரச்சனைகளும் விலகி வாழ்வில் நன்மை பெருகும்.