முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதி மன்றமும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,மக்கள் அனைவரும் நாளை மறுநாள் வெளிவரும் முடிவகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரச்சாரத்தின் போதே வெளிவந்த கருத்துகணிப்பில் அதிகப்படியான இடங்களில் திமுக தான் வெற்றி பெரும் என கூறியது.அவற்றின்படி திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும்.இவர் கூறுவதை பார்த்தல் இவருக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே தெரிந்தது போல உள்ளது.
அதற்கடுத்து அவர் கூறியது,தற்போது இந்தியாவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதித்துள்ளது.அந்த பாதிப்பினால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும்,ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பெருமளவு மக்கள் பாதிப்பதை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்து போகிறேன்.அதனால் எனக்கு வெற்றி கொண்டாட்டங்களை விடவும் எனது உடன்பிறப்புகளின் உயிர்களை பாதுகாப்பதே எனது தலையாய நோக்கம் ஆகும்.
அதனால் கொண்டாட்டத்தை அனைவரும் அவரவர் வீட்டினுள்ளே இருந்து கொண்டாட வேண்டும்.அதுமட்டுமின்றி தொற்றை அலட்சியாமாக எடுத்துக்கொண்டு மக்கள் யாரும் வெளிவர கூடாது.வீதிகள் வெறிச்சோடட்டும்,உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என தெரிவித்தார்.