திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

0
639
Pregnancy before marriage? Shocking photo posted by Kodi movie heroine!
Pregnancy before marriage? Shocking photo posted by Kodi movie heroine!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த படம்தான் கொடி. இப்படத்தில் கதாநாயகிகளாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் அதிக ரசிகர்களை ஈர்த்தார். அதுமட்டுமின்றி இவர் முதன் முதலில் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

அந்த மொழிகளிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பிரேமம் என்று மலையாளத்தில் பெரிய அளவில் ஹிட்டடித்த படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பிறகு தான் அ ஆ, கொடி, தேஜ் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாகிவிட்டார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் வைரலான புகைப்படங்களை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருவது அவருடைய வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்வபோது சில புகைப்படங்களை அப்லோட் செய்துவிட்டு புகைப்படத்திற்கு ஏற்ப கேப்ஷன்களை பதிவிட்டு சலசலப்பை ஏற்படுத்துவது  இவரது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருக்குமாறு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்ப்பமாக உள்ள புகைப்படத்தில் அவருடன் அவரது தந்தையும் உள்ளார். இந்த புகைப்படத்தின் கீழ் என் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகு வாய்ந்த புகைப்படம் என்ற வாக்கியத்தை பதிவிட்டுள்ளார்.இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CZYmqyqJmsR/

இது அவர் நடிக்கும் ஏதாவது ஓர் படத்தில் எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையா? என்பது குறித்து எந்தவித தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகியுள்ளாரா? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் இது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் இதுகுறித்து தன்னுடைய பதிலை கூறும் வகையில் இது போன்ற சலசலப்புகள் பேசப்பட்டு தான் இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous articleகாசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!
Next articleகாங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்