கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்!

Photo of author

By Rupa

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்!

அனைவரும் திருமணம் முடிந்தவுடன் இரண்டு மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படுவது குழந்தை பாக்கியம் தான்.ஆயிரக்கணக்கானோர் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பல குடும்பங்களில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.இதனை தவிர்க்க கர்பரக்ஷாம்பிகை திருக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கி வந்தாள் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ரூ காலம் காலமாக கூறி வருகின்றனர்.இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்னும் இடத்தில் உள்ளது.

இந்த அம்மன் கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பதிலும்,உருவாக்குவதிலும் புகழ் பெற்றவர் என அனைவரும் கூறி வருகின்றனர்.இந்த கோவிலில் முல்லைவன நாதர் என சிவபெருமான் சுயம்புவாக காட்சி அளிக்கிறார்.சுயம்பு என்பது எரும்புகளால் கட்டப்பட்ட ஓர் உருவம். மேலும் அருள்மிகு கருகாத்த நாயகி ஆகிய இருவரும் காட்சியளிக்கின்றனர்.சிவபெருமான் சுயம்பு வடிவத்தில் உள்ளதால் தினசரியும் அபிஷேகங்கள் நடக்காது.சிவபெருமானுக்கும்,வளர்பிறை பிரதோஷ நாட்களில் குறிப்பிட்ட ஒரு பவுடரை வைத்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் நோய் பிடியில் இருந்து தப்பலாம் கால காலமாக கூறப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் அந்த கோவில்லில் முல்லைப்பூ ஆகவே காட்சி அளித்ததால் அங்கிருந்து உருவாகிய சுயம்புநாதர்க்கு  முல்லை நாதர் என்று பெயர் வந்தது.நம் புராண காலத்தில் கூறுவது, கணவன் மனைவி இருவருக்கும் பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.இவர்கள் ஓர் துறவியிடம் சென்று எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறியுள்ளனர்.அதற்கு அந்த துறவியோ நீங்கள் கர்ப்பரட்சாம்பிகை வழிபடுங்கள் உங்களுக்கும் கரு உண்டாகும் எனக் கூறினார்.

அதனைக் கேட்ட கணவன் மனைவி அம்மனை வழிபட்டு வந்த ஓரிரு மாதங்களிலேயே அவரது மனைவி கருவுற்றாள்.அந்தப் பெண் கருவுற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த துறவி அப்பக்கம் வந்துள்ளார்.அப்பெண்மணி அசதியின் காரணமாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.அந்தப் பக்கம் சென்ற துறவி அவள் தூங்கியது தெரியாமல் பேசியுள்ளார்.அந்தப்பெண் அதற்கு பதில் கூறாததால் அந்த துறவி அந்த பெண்ணிற்கு உன் கரு கலையட்டும் என சாபம் போட்டு விட்டு சென்று விட்டார்.

அந்த பெண்ணும் கர்ப்பரக்ஷாம்பிகை நினைத்து வேண்டியதுடன் அவரது கரு கலையாமல்  அம்மன் அவரது குழந்தையை கவசத்தில் காத்து கொடுத்துள்ளார்.அவ்வாறு அவரது கரு காக்கப்பட்டது என  அக்கோவிலின் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அக்கோவிலுக்கு சென்று அம்மனின் முன் நெய் விளக்கு போட்டு அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

அதன் பின் மனம் உருகி பிரார்த்தனை செய்யும் வகையில் கரு உண்டாகும் என அக்கோவிலில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.அதனை அடுத்து அக்கோவிலில் பிரசாதமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறிதளவு நெய் கொடுக்கப்படும்.அதனை நம் வீட்டிற்கு எடுத்துவந்து மற்றொரு நெய்யுடன் கலந்து கணவன் மனைவி இருவரும் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர ,குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.தற்போது வரை கால காலமாக அந்த ஐதீகம் அக்கோவிலில்  நடந்து வருகிறது.