விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்!
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.உலக நாடுகள் பலவும் ஆப்கன் நாட்டு மக்களை மீட்பதற்கு உதவிபுரிந்து வருகின்றனர்.விமானங்கள் மூலம் அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாலிபான் அமைப்பு ஷரியத் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்படும்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.ஏற்கனவே தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிபல கடுமையான சட்டங்களை விதித்தது.
இந்நிலையில் தற்போது இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறது.பொதுமக்கள் பலர் இன்னும் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விமானம் மூலம் பயணம் செய்திருக்கிறார்.அவர் அமெரிக்காவின் சி-17 விமானத்தில் சென்றுள்ளார்.திடீரென பயணத்தின்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அதனால் விமானத்தின் தளபதி விமானத்தை தாழ்வாக இறக்கினார்.விமானத்தினுள் காற்றின் அழுத்தம் அதிகரித்ததால் அந்த பெண் பாதுகாப்பாக இருந்தார்.இதனிடையே அந்த விமானமானது ஜெர்மனி நாட்டில் தரையிறக்கப்பட்டது.அவசர கால மருத்துவ ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.சரக்கு பெட்டகம் வைத்திருக்கும் பகுதியில் இவருக்கு பிரசவம் நடந்தது.
கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிரசவித்தது.குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது.தாயும் குழந்தையும் நல்ல நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.