ADMK DMDK: தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்பதை நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய கருத்தை வைத்து தெரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த் மறைவிற்கு முன்பிருந்தே அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறை எம்பி சீட் தனது மகனுக்கு கிடைத்து விடும் என்ற அபார நம்பிக்கையை பிரேமலதா வைத்திருந்தார். இது ரீதியாக அவர்கள் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார்.
ஆனால் எம்பி சீட் தேர்வின் போது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக தன் கட்சி சார்ந்த நிர்வாகிகள் இருவரையே தேர்ந்தெடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவெடுக்க துணிந்து விட்டனர். ஆனால் அதிமுகவிற்கு தேமுதிகவின் வாக்கு வங்கி மிகவும் முக்கியம். அதனால் அடுத்த ஆண்டு கட்டாயம் எம்பி சீட் தருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாறாக இது குறித்து எந்த ஒரு சம்மதத்தையும் தேமுதிக தெரிவிக்கவில்லை. தாங்கள் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி யார் என்பதை அறிவிப்போம் என தெரிவித்துவிட்டனர். ஆனால் நேற்று நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டியில், வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் எடப்பாடி ஏமாற்றிவிட்டார்.
இதுதான் உண்மை. அவர் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் காத்திருந்தோம், அந்த காத்திருந்தமைக்கு எங்கள் முதுகில் சீட் தருவதாக கூறி குத்திவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் கூட்டணி ஒப்பந்தம் செய்யும்போது எந்த ஒரு தேதியும் குறிப்பிடாமல் கையெழுத்திடுவது தான் வழக்கம். அதேபோல தான் எடப்பாடியும் தேதி குறிப்பிடாமல் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அதுதான் நாங்கள் ஏமாறுவதற்கு முக்கிய காரணம். அதேபோல எடப்பாடி எதிர்பார்த்து எந்த ஒரு கூட்டமும் கூடவில்லை. அனைத்திற்கும் பணம் கட்டியே கூட்டத்தை அழைப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டியின் வாயிலாக தேமுதிக அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாராகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.