சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய் கட்சி உறுப்பினர் நியமனத்தில் வெகு பிஸியாக இயங்கி வருகிறார். மேலும், அவர் மார்ச் மாதம் முதல் மக்களை நேரில் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள் கசிகின்றன. கூட்டணி குறித்த அவதூறு செய்திகள் பரவி வருவதாகவும் தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. விஜயை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்த விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா நேற்று விஜயின் அரசியல் வாழ்க்கை குறித்து சில அட்வைஸ் வாயிலாக விஜயை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் விஜய் வளர்ந்தார். அவர் வளர்ந்தது முதல் சினிமாவில் அடி எடுத்து வைத்தது வரை எங்களுடைய பங்கும் உண்டு என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் சினிமா வேறு! அரசியல் வேறு! என்ற பல நுணுக்கங்களை அவருக்கு சொல்லி இருக்கிறோம். அவர் அரசியலில் என்ன செய்யப் போகிறார்? என்பதை காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம். அவர் அறையை விட்டு வெளியே வந்து மக்களோடு மக்களாக அரசியல் களம் காண வேண்டும். அடிக்கடி மக்களையும், செய்தியாளர்களையும் சந்தித்து பேச வேண்டும். மக்கள் பிரச்னையை கையில் எடுத்தால் தான் நம்மால் அரசியலில் நிற்க முடியும் என்றெல்லாம் நான் அவரிடம் எடுத்துரைத்துள்ளேன். மேலும், தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசகையில், மத்திய அரசு குற்றம் சொல்லும் தமிழக அரசு என்ன செய்துள்ளது? இந்தியாவிலேயே அதிக கடன் தமிழ்நாட்டிற்கே உண்டு. என்றளவும் இல்லாத வகையில் திடீரென திருப்பரங்குன்ற பிரச்சினை வெடிப்பது ஏன்? அங்கு அரசியல் கட்டாயமாக உள்ளது. அங்குள்ள சகோதரர்களான இந்து, முஸ்லிம்களை பிரிப்பதற்கு அங்கு ஏற்படும் சதி என்று அவர் தெரிவித்துள்ளார்.