நெருங்கும் தேர்தல்! களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் மற்றும் ஆறாம் தேதி வரை திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கை குழுவினை திமுக தலைமை அறிவித்திருக்கின்றது.

அந்த குழுவில் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி ஆர் பாலு கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், போன்றோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அதோடு டிகேஎஸ் இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி, உள்ளிட்டோரும், இந்த குழுவில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கும் இந்த குழு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது.

நவம்பர் மாதம் மூன்றாம் தேதி கோவை, மற்றும் நீலகிரி, மாவட்டத்திலும் ,நான்காம் தேதி ஈரோடு, மற்றும் திருப்பூர் மாவட்டத்திலும் , சுற்றுப்பயணம் செய்கின்றது.

நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அன்று நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டத்திலும் ஆறாம் தேதி கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி, மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் நடைபெற இருக்கின்றது.

இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெறக்கூடிய, அம்சங்கள் சம்பந்தமாக, டி ஆர். பாலு அவர்களின் தலைமையிலான, குழுவிடம் மனு கொடுக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.